/உள்ளூர் செய்திகள்/தேனி/ தவிப்பு...: சிகிச்சைக்கு முதியோர்கள் உதவியாளருடன் வர நிர்பந்திப்பதால் அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு துவக்கிட வலியுறுத்தல் தவிப்பு...: சிகிச்சைக்கு முதியோர்கள் உதவியாளருடன் வர நிர்பந்திப்பதால் அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு துவக்கிட வலியுறுத்தல்
தவிப்பு...: சிகிச்சைக்கு முதியோர்கள் உதவியாளருடன் வர நிர்பந்திப்பதால் அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு துவக்கிட வலியுறுத்தல்
தவிப்பு...: சிகிச்சைக்கு முதியோர்கள் உதவியாளருடன் வர நிர்பந்திப்பதால் அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு துவக்கிட வலியுறுத்தல்
தவிப்பு...: சிகிச்சைக்கு முதியோர்கள் உதவியாளருடன் வர நிர்பந்திப்பதால் அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு துவக்கிட வலியுறுத்தல்
ADDED : செப் 26, 2025 02:20 AM

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் முதியோர்கள் துணைக்கு உதவியாளர் ஒருவரை அழைத்து வர டாக்டர்கள், செவிலியர்கள் நிர்ப்பந்திப்பதால் முழுமையான சிகிச்சை பெற முடியாமல் பலரும் தவிக்கின்றனர்.
மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன், தேனியில் புதிதாக துவக்கப்பட்டுள்ள அரசு மனநல காப்பகம் செயல்படுகிறது. இதே போல் நலப்பணிகள் இணை இயக்குனர் கட்டுப்பாட்டில் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடி, உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், மாவட்டம் முழுவதும் பொது சுகாதாரத்துறையின் கீழ் 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள், அதன் கீழ் செயல்படும் 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 162 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மூலம் பிறப்பு, இறப்பு, பதிவு மற்றும் கர்ப்பிணிகளுக்கு தொடர் கண்காணிப்பு, அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் அரசின் திட்டங்கள் மூலம் கிடைக்கும் பலன்கள் ஆகியவை சென்றடைகின்றன. குக்கிராமம் முதல் பெரிய நகரங்கள் வரை ஆங்காங்குள்ள பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப தங்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
வயோதிகத்தால் ஏற்படும் பாதிப்புக்கான ஆலோசனை, அதற்கான தொடர் சிகிச்சைக்காக பெற தினமும் முதியோர்கள் பலர் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து செல்கின்றனர். சமூக பாதுகாப்பு, குடும்ப அரவணைப்பு இல்லாத முதியோர்கள் பலர் சர்க்கரை, ரத்த கொதிப்பு, ஆஸ்துமா, மூச்சுத் திணறல், மூட்டு வலி, கண்பார்வை குறைபாடு, ஒவ்வாமை நோய்களால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். புற நோயாளிகள் பிரிவில் நீண்ட வரிசையில் காத்திருந்து டாக்டர்களை சந்திக்கும் முதியவர்கள், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு வரும் முதியவர்கள் தங்களுடன் 18 வயது முடிந்த ஒருவரை உதவிக்கு உடன் அழைத்து வர நிர்பந்திக்கப்படுகின்றனர்.
முதியோர் பிரிவு துவக்க வேண்டும் முதியார்கள் உள்நோயாளிகளாக சேரும்போது ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள், மொபைல் எண்கள் கொடுக்க முடியாமல் பலரும் தவிக்கின்றனர். அவ்வாறு வரும் முதியவர்களுக்கு தேவையான முழுமையான சிகிச்சை அளிக்காமல் மருந்து மாத்திரை கொடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுப்பி விடுகின்றனர். தங்கள் உடல் நலப் பாதிப்பை சரி செய்ய மீண்டும் அதே அரசு மருத்துவமனைகளை நாடி சென்றாலும் அவர்களுள் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற வாய்ப்பு கிடைப்பதில்லை. அரசு மருத்துவமனைகளில் முதியவர்களுக்காக தனிப்பிரிவுகள் துவக்கவும், உடன் ஒருவரை அழைத்து வர முடியாமல் தவிக்கும் முதியோர்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்கவும் அரசு நிர்வாகங்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.