கடையில் தகராறு: 4 பேர் மீது வழக்கு
கடையில் தகராறு: 4 பேர் மீது வழக்கு
கடையில் தகராறு: 4 பேர் மீது வழக்கு
ADDED : மார் 23, 2025 07:35 AM
சின்னமனூர்,: சின்னமனூர் அருகே உள்ள கன்னி சேர்வைபட்டி பஸ் ஸ்டாப்பில் டீ கடை வைத்திருப்பவர் முருகேசன் 60, இவர் கடைக்கு தினமும் இதே ஊரை சேர்ந்த ராஜ்குமார், பிரகாஷ், சன்ரைசி ,பிரவீன் ஆகிய நால்வரும் வடை, பரோட்டா சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றுள்ளனர்.
பணம் கேட்டதற்கு கடைக்கு முன் பட்டாசு வெடித்து தகராறு செய்துள்ளனர். புகாரின்பேரில் சின்னமனூர் போலீசார் நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.