/உள்ளூர் செய்திகள்/தேனி/ குவாரியை ஒத்திக்கு தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி குவாரியை ஒத்திக்கு தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி
குவாரியை ஒத்திக்கு தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி
குவாரியை ஒத்திக்கு தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி
குவாரியை ஒத்திக்கு தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 21, 2025 09:20 PM
தேனி:கேரள மாநிலம் கண்ணுார் தளிபரம்பா ஆசாத்நகர் சித்திக்மதாலன், அவரது நண்பர் அப்துல்நாசர் ஆகியோரை கல்குவாரி கிரஷரை ஒத்திக்கு தருவதாக கூறி ரூ.35 லட்சம் பெற்று மோசடி செய்த தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரம் மேற்குதெரு ஆசைதம்பி மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்த சித்திக்மதாலனுக்கு சாலம் என்பவர் மூலம் 2022 ல் போடியைச் சேர்ந்த ஆசைதம்பி அறிமுகமானார். அவர் தேனி அல்லிநகரம் நல்லுக்குண்டு கரட்டில் தனக்கு சொந்தமான 12 ஏக்கரில் உள்ள கல்குவாரி கிரஷரை ரூ.20 லட்சத்திற்கு ஒத்திக்கு வழங்குவதாக கூறினார். அதை நம்பி சித்திக்மதாலன் ரூ.20லட்சம் வழங்கினார். இருவரும் கல்குவாரி உரிமம் தொடர்பாக 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் கல்குவாரியை ஒப்படைக்காமல் ஆசைத்தம்பி காலம் தாழ்த்தினார். இதுகுறித்து கேட்ட போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் அதற்கு ரூ.15 லட்சம் தேவைப்படுவதாகவும் கூறினார். அந்த தொகையையும் சித்திக்மதாலன் வழங்கினார்.
சித்திக்மதாலனுக்கு அபுதாபில் வேலை கிடைத்ததால் அங்கு சென்றார். நண்பர் அப்துல்நாசருக்கு பவர் எழுதி கொடுத்து சென்றார். இந்நிலையில் அப்துல்நாசர் கல்குவாரி குறித்து விசாரித்த போது, அந்த குவாரி மற்றொருவர் பெயரில் இருப்பது தெரிந்தது. இதனால் இதுவரை வழங்கிய பணத்தை திருப்பி தர ஆசைத்தம்பியிடம் சித்திக்மதாலன் கூறினார். பணத்தை திருப்பி தரமுடியாது எனக்கூறிய ஆசைத்தம்பி இதுதொடர்பாக அப்துல் நாசருக்கு கொலைமிரட்டல் விடுத்தார். அப்துல்நாசர் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் மனு அளித்தார். இப்புகாரின் பேரில் ஆசைத்தம்பி மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.