/உள்ளூர் செய்திகள்/தேனி/ கிராமசபை முதல்வர் நேரலையில் கிறிஸ்தவ பாடல்கள் ஒலிபரப்பு கிராமசபை முதல்வர் நேரலையில் கிறிஸ்தவ பாடல்கள் ஒலிபரப்பு
கிராமசபை முதல்வர் நேரலையில் கிறிஸ்தவ பாடல்கள் ஒலிபரப்பு
கிராமசபை முதல்வர் நேரலையில் கிறிஸ்தவ பாடல்கள் ஒலிபரப்பு
கிராமசபை முதல்வர் நேரலையில் கிறிஸ்தவ பாடல்கள் ஒலிபரப்பு
ADDED : அக் 12, 2025 05:44 AM
கம்பம் :கிராம சபை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரலை நிகழ்ச்சியின் போது திடீரென கிறிஸ்தவ பிரசார பாடல்கள் ஒலிபரப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் துவங்கியது.
எல்.இ.டி. டிவியில் தமிழக முதல்வர் பேச துவங்கினார்.
சிறிது நேரத்தில் முதல்வர் உரை நின்று, டிவியில் கிறிஸ்தவ பிரசார பாடல்கள் ஒலிபரப்பானது.
கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
இச் சம்பவம் கம்பம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் முன்னிலையில் நடந்தது.
இது குறித்து ஊராட்சி செயலர் பிச்சைமணி கூறுகையில், 'முதல்வர் உரை முழுவதும் முடிந்த பின் அதில் ஏற்கெனவே இருந்த கிறிஸ்தவ பாடல்கள் ஒலி பரப்பானது.
முதல்வர் உரையில் எந்த தடங்கலும் ஏற்படவில்லை,'என்றார்.


