/உள்ளூர் செய்திகள்/தேனி/தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜன 28, 2024 05:04 AM
தேனி ; மாவட்டத்தில் ராபி பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான வாழை, தக்காளி, கத்தரி, முட்டைகோஸ், கொத்தமல்லி ஆகியவற்றிற்குபயிர்காப்பீடு செய்ய அதிகாரிகள் வலியுறுத்திஉள்ளனர்.
பயிர்காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய மாவட்டத்தில் 26 வருவாய் கிராமங்கள்தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் பயிர்காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் ஒரு ஏக்கர் தக்காளிக்கு ரூ.927.50, கத்தரிக்கு ரூ.1205, முட்டைக்கோசுக்கு ரூ.1227.50 ஜன.31க்குள் செலுத்த வேண்டும். மேலும் வாழைக்கு ரூ.3,430 யை மார்ச் 29க்குள் செலுத்த வேண்டும்.
பயிர்காப்பீடு செய்ய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் வாரியாக காப்பீட்டு கட்டணத்தை சிட்டா, அடங்கல், புகைப்படம், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்கவேண்டும்.
காப்பீட்டு திட்டம் பற்றிய விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை அலுவலகங்களை அணுகலாம் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.