ADDED : பிப் 25, 2024 05:06 AM
தேனி தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் வணிக நிர்வாகவியில் துறை சார்பில், 'சேவைத்துறைகளின் புதுமை முன்னுதாரணம், வளர்ச்சிக்கான சாத்தியம்' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் காசிபிரபு, இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா பேசினர்.சீனா குவாங்சி பல்கலை கணக்கியல், நிதியியல் பீட முனைவர் ஜெயராஜ் சோனை சிங்காரம் டிஜிட்டல், ஐ.சி.டி., சகாப்தத்தில் சர்வதேச கணக்கியல் தணிக்கை என்ற தலைப்பில் பேசினார்.
யூ.ஏ.இ., வி.பி.வி., சர்வதேச நிறுவன மேலாண்மைத்தலைவர் திலிப்பாபுசுப்ராம் தொழில்வளர்ச்சி என்ற தலைப்பில் பேசினார்.
சென்னை வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் ஜெகதீசன், சேலம் பல்கலை வணிகவியல் துறைத் தலைவர் கிருஷ்ணகுமார், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி இணைப்பேராசிரியர் பினிட்முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
கருத்தரங்கில் 10 கல்லுாரிகளைச் சேர்ந்த 270 மாணவர்கள் பங்கேற்றனர்.