ADDED : டிச 05, 2025 05:41 AM
தேனி: கவிஞர் நா.காமராசன், வே.தில்லைநாயகம், வீரு கவியரசர் முடியரசன், சி.சு.செல்லப்பா ஆகியோரின் தமிழ் இலக்கிய பங்களிப்பை நினைவு கூறும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் டிச.,8 காலை 9:30 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும், மதியம் 2:30 மணிக்கு கல்லுாரி மாணவர்களுக்கும் பேச்சு போட்டி நடக்கிறது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லுாரி முதல்வர்கள் பரிந்துரை கடிதத்துடன் மாணவர்கள் பங்கேற்கலாம். தமிழ் அறிஞர்கள் தொடர்பாக இலக்கிய கருத்தரங்கம் பெரியகுளம் மேரிமாதா கலை, அறிவியல் கல்லுாரியில் டிச.,10ல் நடக்கிறது. பேச்சுப்போட்டி, கருத்தரங்கில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


