Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/அறிவிப்போடு முடங்கிய மொத்த காய்கறி வணிக வளாக திட்டம் வாழை தொகுப்பு திட்டம் போல் இதுவும் முடங்கியதா

அறிவிப்போடு முடங்கிய மொத்த காய்கறி வணிக வளாக திட்டம் வாழை தொகுப்பு திட்டம் போல் இதுவும் முடங்கியதா

அறிவிப்போடு முடங்கிய மொத்த காய்கறி வணிக வளாக திட்டம் வாழை தொகுப்பு திட்டம் போல் இதுவும் முடங்கியதா

அறிவிப்போடு முடங்கிய மொத்த காய்கறி வணிக வளாக திட்டம் வாழை தொகுப்பு திட்டம் போல் இதுவும் முடங்கியதா

ADDED : ஜன 18, 2024 06:11 AM


Google News
சின்னமனூர்: சின்னமனூரில் மொத்த காய்கறி விற்பனை வணிக வளாகம் அமைக்க ஆய்வுகள் நடத்திய நிலையில் திட்டம் முடங்கியுள்ளது. வாழை தொகுப்பு திட்டம் முடங்கிய வரிசையில் மொத்த காய்கறி விற்பனை வளாகம் முடக்கமா என விவசாயிகள் புலம்புகின்றனர்.

கம்பம் பள்ளத்தாக்கில் காய்கறி சாகுபடி அதிக பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. அதிகளவில் கேரளாவிற்கு சின்னமனூர், கம்பம் பகுதியில் இருந்து தினமும் 50 முதல் 80 டன் வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர வாரச்சந்தை நாட்களிலும் அதிக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

சின்னமனூரில் தனியார் மொத்த காய்கறி வளாகம் ஏற்கெனவே பஸ் ஸ்டாண்ட் அருகில் செயல்பட்டு வருகிறது.

தற்போது அரசு சார்பில் விவசாயிகள் பயன்பெறுவதற்காக மொத்த காய்கறி வணிக வளாகம் இங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஆலோசனை கூட்டம் 6 மாதங்களுக்கு முன் சின்னமனூரில் வேளாண் வணிக துணை இயக்குனர் சரவணன் தலைமையிலும், கலெக்டர் ஷஜீவனா தலைமையிலும் நடைபெற்றது.

இதில் ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் 70 கடைகள், அலுவலகம், வாகன நிறுத்துமிடம், ஒய்வறை, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தருவது என்று முடிவு செய்யப்பட்டது.

போக்குவரத்திற்கு எளிதான அதே சமயம் எல்லா கிராமங்களிலிருந்தும் வருவதற்கு வசதியான இடம். வாகனங்கள் நிறுத்தம் வேளாண், தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட ஒருங்கிணைந்த அலுவலகங்கள் உள்ளன. பெண் விவசாயிகள், பெண் வியாபாரிகளுக்கு பாதுகாப்பாக இடம்.

எனவே இங்கு வணிக வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆய்வு நடத்தி, ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதோடு திட்டம் முடங்கியுள்ளது. அதன்பின் அத் திட்டம் பற்றிய பேச்சே இல்லை.

அறிவிப்போடு நின்று போன வாழை தொகுப்பு திட்டத்துடன் இந்த திட்டமும் சேர்ந்து விட்டதென்று விவசாயிகள் கூறுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us