ADDED : பிப் 12, 2024 05:42 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஏஞ்சல் வித்யா மந்திர் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா ஆண்டிபட்டி தாசில்தார் காதர் ஷெரீப் தலைமையில் நடந்தது. டி.எஸ்.பி., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பிரியா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வர்த்தக பிரமுகர் ஜெகநாத் மிஸ்ரா பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.
முன்னதாக பள்ளியில் நடந்த விளையாட்டு, திருக்குறள் ஒப்புவித்தல், கவிதை, கட்டுரை, பாட்டு, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மாணவர்கள் விழா மேடையில் கராத்தே, சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை செய்து காண்பித்தனர். விழாவில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.