/உள்ளூர் செய்திகள்/தேனி/ கம்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது அக்.,9ல் நம்பிக்கையில்லா தீர்மானம் தி.மு.க., அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் 22 பேர் போர்க்கொடி கம்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது அக்.,9ல் நம்பிக்கையில்லா தீர்மானம் தி.மு.க., அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் 22 பேர் போர்க்கொடி
கம்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது அக்.,9ல் நம்பிக்கையில்லா தீர்மானம் தி.மு.க., அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் 22 பேர் போர்க்கொடி
கம்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது அக்.,9ல் நம்பிக்கையில்லா தீர்மானம் தி.மு.க., அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் 22 பேர் போர்க்கொடி
கம்பம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மீது அக்.,9ல் நம்பிக்கையில்லா தீர்மானம் தி.மு.க., அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் 22 பேர் போர்க்கொடி
ADDED : செப் 25, 2025 12:06 AM
கம்பம்,:தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி தலைவர் வனிதா (தி.மு.க.), துணைத்தலைவர் வினோதா (தி.மு.க.) மீது அக்., 9ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்த கவுன்சிலர்களுக்கு நகராட்சி அழைப்பு அனுப்பியுள்ளது.
கம்பம் நகராட்சியில் தி.மு.க. 24, அ.தி.மு.க., 7, காங்கிரஸ் மற்றும் இ.முஸ்லிம் லீக் தலா ஒருவர் என 33 கவுன்சிலர்கள் உள்ளனர். தலைவர், துணை தலைவரை தவிர்த்து 22 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளனர்.
நகராட்சி தலைவர் வனிதாவுக்கும் கவுன்சிலர்களுக்கும் கடந்த 6 மாதமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. கடந்த மாதம் நகராட்சி கூட்டம் நடத்த முடியாத அளவிற்கு கவுன்சிலர்கள் காரசார விவாதம் நடந்தது. இதனால் கூட்டம் பாதியில் முடிந்தது.
இந்நிலையில் செப்.10ல் தி.மு.க. கவுன்சிலர்கள் 16 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர்களும் தனித் தனியாக தலைவர், துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கலெக்டர், ஆர். டி.ஓ., கமிஷனர் உமாசங்கரிடம் மனு வழங்கினர். இந்நிலையில் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், தி.மு.க. மேலிட பார்வையாளர் ஜெயன் ஆகியோர் தி.மு.க. கவுன்சிலர்களை அழைத்து இரண்டு முறை சமரச - பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதை தொடர்ந்து கம்பம் நகராட்சி கமிஷனர் கவுன்சிலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், 'தி.மு.க. கவுன்சிலர்கள் 16 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் செப். 10ல் வழங்கிய கடிதத்தின் பேரில், நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் மீது கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் வரும் அக். 9 ல் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. அக் கூட்டத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறேன்,' என குறிப்பிட்டுள்ளார்.
தலைவர், துணைத்தலைவர் தவிர மீதமுள்ள 31பேரில், 22 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளனர். மீதமுள்ள 9 கவுன்சிலர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.