/உள்ளூர் செய்திகள்/தேனி/ இடமலைகுடிக்கு ரேஷன் பொருட்கள் செல்வதில் சிக்கல் மலைவாழ் மக்கள் பட்டினிக்கு வாய்ப்பு இடமலைகுடிக்கு ரேஷன் பொருட்கள் செல்வதில் சிக்கல் மலைவாழ் மக்கள் பட்டினிக்கு வாய்ப்பு
இடமலைகுடிக்கு ரேஷன் பொருட்கள் செல்வதில் சிக்கல் மலைவாழ் மக்கள் பட்டினிக்கு வாய்ப்பு
இடமலைகுடிக்கு ரேஷன் பொருட்கள் செல்வதில் சிக்கல் மலைவாழ் மக்கள் பட்டினிக்கு வாய்ப்பு
இடமலைகுடிக்கு ரேஷன் பொருட்கள் செல்வதில் சிக்கல் மலைவாழ் மக்கள் பட்டினிக்கு வாய்ப்பு
ADDED : ஜூன் 23, 2025 05:37 AM
மூணாறு : இடமலைகுடி ஊராட்சிக்கு ரேஷன் பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மலைவாழ் மக்கள் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மூணாறு அருகே அடர்ந்த வனத்தினுள் உள்ள இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். அங்கு 24 குடிகளில் (கிராமம்) மலைவாழ் மக்கள் வசித்து வரும் நிலையில், சொசைட்டிகுடி, பரப்பியாறுகுடி ஆகிய பகுதிகளில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
அந்த ரேஷன் கடைகளுக்கு மூணாறில் உள்ள மலைவாழ் மக்கள் நலத்துறை சார்பிலான கிரிஜன் கூட்டுறவு சங்கம் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. அங்கிருந்து கொண்டு செய்யப்படும் பொருட்கள் ராஜமலை பெட்டிமுடியில் உள்ள குடோனில் பாதுகாக்கப்பட்டு இடமலை குடிக்கு கொண்டு செல்லப்படும்.
ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் கிரிஜன் கூட்டுறவு சங்கம் வழங்கி வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வாகனங்களுக்கு கட்டணத் தொகை வழங்காததால் ரூ.35 லட்சம் வரை நிலுவை ஏற்பட்டது. ஆகவே ரேஷன் பொருட்களை கொண்டு செல்ல வாகன உரிமையாளகள் மறுத்து விட்டனர்.
ரேஷன் கடைகளில் இருப்பு வைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் வினியோகிக்கப்பட்டதால், தற்போது பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் மலைவாழ் மக்கள் பட்டினி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.