/உள்ளூர் செய்திகள்/தேனி/ பள்ளிகளில் போக்சோ சட்ட புத்தகம் வழங்கும் திட்டம் துவக்கம் பள்ளிகளில் போக்சோ சட்ட புத்தகம் வழங்கும் திட்டம் துவக்கம்
பள்ளிகளில் போக்சோ சட்ட புத்தகம் வழங்கும் திட்டம் துவக்கம்
பள்ளிகளில் போக்சோ சட்ட புத்தகம் வழங்கும் திட்டம் துவக்கம்
பள்ளிகளில் போக்சோ சட்ட புத்தகம் வழங்கும் திட்டம் துவக்கம்
ADDED : ஜூன் 22, 2025 12:11 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் 'போக்சோ' அடிப்படை சட்ட புத்தகம் வழங்கும் திட்டம் நேற்று துவங்கியது.
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் 2012ம் ஆண்டு ' போக்சோ' சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு இன்றி ' போக்சோ' வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பான குழந்தை திட்டத்தின்படி, இடுக்கி மாவட்ட சட்ட சேவை ஆணையம், கல்வி துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, கேரள மாநில சட்ட சேவை ஆகியோர் சார்பில் ' போக்சோ' அடிப்படை சட்ட புத்தகம் வழங்கும் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து பள்ளிகளுக்கும் சட்ட புத்தகம் வழங்கும் திட்டம் நேற்று துவங்கியது.
மாவட்ட நீதிபதி சசிகுமார் துவக்கி வைத்தார். போக்சோ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி ஆஷ் கே.பால், மாவட்ட எஸ்.பி. விஷ்ணுபிரதீப், சைல்ட் லைன் அமைப்பு குழு தலைவர் ஜெயசீலன்பால், மாவட்ட கல்வி துறை அதிகாரி ஷிபாமுகம்மது உள்பட பலர் பங்கேற்றனர்.