/உள்ளூர் செய்திகள்/தேனி/ தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2025 04:52 AM
தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுருளி முன்னிலை வகித்தார்.
துாய்மை காவலர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.