ADDED : செப் 29, 2025 06:16 AM
தேனி :ஆண்டிபட்டி தாலுகா மொட்டனுாத்து ஊராட்சியில் வைகை நதி தெரு உள்ளது. மூன்றில் 2ல் மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து இரவில் மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
மின்விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அத்தெரு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


