ADDED : அக் 07, 2025 04:36 AM
கூடலுார்: கூடலுாரில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.,) நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் 1925ல் துவக்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழாவிற்கு முன்னாள் தலைமை ஆசிரியர் கதிரேசன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் செந்தில்குமார், விஸ்வகர்மா மகாஜன சங்கத் தலைவர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர் கணேசன் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கலந்துகொண்ட அனைவருக்கும் பண்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டது. ஏராளமானோர் சீருடையுடன் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ்.சின் பிரார்த்தனை பாடல் பாடப்பட்டது.


