ADDED : ஜூன் 24, 2024 02:07 AM
தேனி, : ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து கிராமப்புற நிலங்களுக்கான முழுப்புலம், உட்பிரிவு இணையவழி பட்டா மாறுதல் தொடர்பான சிறப்பு முகாம் ஜூன் 26ல் நடக்கிறது.
முகாம் ஆண்டிப்பட்டி குறுவட்ட சர்வேயர் குடியிருப்பு அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. ஆண்டிப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த பொது மக்கள் ஆதார ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.