/உள்ளூர் செய்திகள்/தேனி/திடீரென உடைந்த பாறை: தொழிலாளர்கள் அச்சம்திடீரென உடைந்த பாறை: தொழிலாளர்கள் அச்சம்
திடீரென உடைந்த பாறை: தொழிலாளர்கள் அச்சம்
திடீரென உடைந்த பாறை: தொழிலாளர்கள் அச்சம்
திடீரென உடைந்த பாறை: தொழிலாளர்கள் அச்சம்
ADDED : பிப் 02, 2024 12:12 AM

மூணாறு : மூணாறு அருகே தேயிலை தோட்டத்தினுள் உள்ள பாறை திடிரென உடைந்த சம்பவம் தொழிலாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷனில் தேயிலை தோட்ட எண் 14ல் மெகா சைஸ் பாறை உள்ளது. அதன் ஒரு பகுதி நேற்று முன்தினம் இரவு திடிரென உடைந்து தேயிலை தோட்டத்தினுள் விழுந்தது. சம்பவம் இரவில் நடந்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. பாறை உடைந்த விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை என்பதால் அதனை குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இது போன்று மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை எஸ்டேட், முதுவான்பாறை பகுதியில் கடந்தாண்டு மே 4ல் பகல் 12:00 மணிக்கு மலை மீது இருந்து ராட்சத பாறை வெடித்து உருண்டது.
அப்போது அந்த வழியில் வந்த சுற்றுலா கார் மீது சிதறிய பாறை துண்டுகள் விழுந்து டிரைவர் அந்தோணிராஜ் 38, பலத்த காயம் அடைந்தார்.
பாறைகள் உடைந்தும், வெடித்தும் உருளும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


