ADDED : செப் 19, 2025 02:32 AM

தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தகுதி தேர்வில் விலக்கு பெற வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார்.
நிர்வாகி பாலசுந்தரம், பிற சங்க நிர்வாகிகள் தாஜூதீன், ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.