/உள்ளூர் செய்திகள்/தேனி/டாக்டர் நியமிக்காததால் 14 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத மகப்பேறு பிரிவுடாக்டர் நியமிக்காததால் 14 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத மகப்பேறு பிரிவு
டாக்டர் நியமிக்காததால் 14 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத மகப்பேறு பிரிவு
டாக்டர் நியமிக்காததால் 14 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத மகப்பேறு பிரிவு
டாக்டர் நியமிக்காததால் 14 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத மகப்பேறு பிரிவு
ADDED : பிப் 11, 2024 01:35 AM

மூணாறு: தேவிகுளத்தில் மக்கள் சுகாதார மையம் அருகே கட்டப்பட்ட மகப்பேறு பிரிவு திறப்பு விழா கண்டு 14 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
மூணாறில் அரசு சார்பில் மருத்துவமனை இல்லை என்ற போதும் தேவிகுளத்தில் உள்ள மக்கள் சுகாதார மையம் மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. அதில் உயிர் காக்கும் மருத்துவ வசதி மகப்பேறு பிரிவு ஆகியவை இல்லை. மக்கள் சுகாதார மையம் அருகில் மகப்பேறு பிரிவுக்கு 2010ல் தேவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.60 லட்சம் செலவில் 16 படுக்கைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்த நிலையில் 14 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அங்கு டாக்டர்கள் நியமிப்பதில் அரசு அலட்சியம் காட்டியதால் மகப்பேறு பிரிவு பயன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
தேவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மிகவும் பின் தங்கிய பகுதிகள் ஏராளம் உள்ளன. குறிப்பாக மூணாறு, தேவிகுளம், வட்டவடை, மறையூர், காந்தலூர் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் உள்பட பொது மக்கள் மகப்பேறு தொடர்பான சிகிச்சைகள் பெறும் நோக்கத்தில் கட்டடம் கட்டப்பட்டது. அந்த நோக்கம் நிறைவேற்றப்படாததால் அப்பகுதி மக்கள் மகப்பேறு தொடர்பான சிகிச்சைக்கு நீண்ட தூரம் பயணித்து அடிமாலி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அவலம் நீடித்து வருகிறது.