ADDED : செப் 19, 2025 02:28 AM
மூணாறு: மூணாறு அருகே குண்டளை எஸ்டேட், ஈஸ்ட் டிவிஷனை சேர்ந்தவர் தொழிலாளி ஜெயகுமார். இவர் பசுக்களை வளர்த்து வருகிறார். அவரது எட்டு மாத சினை பசு நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அங்கு வந்த புலி பசுவை கொன்று அதன் பின் பகுதியின் இறைச்சியை தின்று கொண்டிருந்தது.
அப்போது பணிக்கு செல்ல ஆயத்தமான தொழிலாளர்கள் பசுவின் இறைச்சியை புலி தின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் பலமாக கூச்சலிட்டனர். புலி தப்பி ஓடிவிட்ட நிலையில் மீண்டும் வரும் என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.