ADDED : பிப் 25, 2024 04:09 AM
தேனி, : தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் பழங்குடியின இளைஞர்களுக்கு க்யூ பிரிவு, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் டி.என்.பி.எஸ்.சி., தேர்விற்கு விண்ணப்பிப்பது தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடந்தது.
ஆதிதிராவிடர் நல மாவட்ட அலுவலர் சசிகலா தலைமை வகித்தார். க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் செந்தில், மகேந்திரன் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கினர்.
தேர்வு தொடர்பாக குறிப்புகள் அடங்கிய புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
பயிற்சி ஏற்பாடுகளை ஆசிரியர் விஜயராஜா மற்றும் போலீசார் செய்திருந்தனர்.