/உள்ளூர் செய்திகள்/தேனி/ குளத்தில் மண் கடத்தலால் மரங்கள் சாயும் அவலம் குளத்தில் மண் கடத்தலால் மரங்கள் சாயும் அவலம்
குளத்தில் மண் கடத்தலால் மரங்கள் சாயும் அவலம்
குளத்தில் மண் கடத்தலால் மரங்கள் சாயும் அவலம்
குளத்தில் மண் கடத்தலால் மரங்கள் சாயும் அவலம்
ADDED : செப் 26, 2025 02:26 AM
போடி: போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் 50 ஏக்கர் பரப்பளவிலானது கவுண்டன்குளம் கண்மாய். குளத்திற்கு மழை நீர் மற்றும் 18ம் கால்வாய் மூலம் வரும் தண்ணீர் சேமிக்கப் படுகின்றன. குளத்தில் டிராக்டர் மூலம் மண் அள்ளி கடத்தப்படுவதால் மண் வளம் குறைந்து சுற்றி வளர்ந்துள்ள மரங்களின் அடிப்பாகம் அரிப்பு ஏற்பட்டு வேரோடு சாய்ந்து வருகின்றன.
இதனை சாதகமாக பயன் படுத்தி சிலர் இரவோடு இரவாக ரூ. பல ஆயிரம் மதிப்புள்ள மரங்களை வெட்டி கடத்துவது தொடர்கிறது. விவசாயிகள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க உதவும் குளத்தில் மண் அள்ளுவது, மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.