/உள்ளூர் செய்திகள்/தேனி/போடி நகராட்சியை கண்டித்து காய்கறி வியாபாரிகள் ரோடு மறியல்போடி நகராட்சியை கண்டித்து காய்கறி வியாபாரிகள் ரோடு மறியல்
போடி நகராட்சியை கண்டித்து காய்கறி வியாபாரிகள் ரோடு மறியல்
போடி நகராட்சியை கண்டித்து காய்கறி வியாபாரிகள் ரோடு மறியல்
போடி நகராட்சியை கண்டித்து காய்கறி வியாபாரிகள் ரோடு மறியல்
ADDED : பிப் 12, 2024 05:51 AM
போடி: போடி தென்றல் நகர் மெயின் ரோட்டை ஆக்கிரமித்து காய்கறி வாரச்சந்தை அமைக்க நகராட்சி நிர்வாகம் தடை செய்ததை கண்டித்து காய்கறி வியாபாரிகள் நேற்று ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
போடி கருப்பசாமி கோயில் அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாரம் ஒரு நாள் ஞாயிறு தோறும் காய்கறி வாரச் சந்தை 20 ஆண்டுகளாக இயங்குகிறது. நகராட்சி இடத்தின் ஒரு பகுதியை நீதிமன்றம் கட்டுவதற்காக இடம் ஒதுக்கீடு செய்தது. மீதம் உள்ள இடத்தில் நகராட்சி வணிக வளாகம் கட்டும் பணியும் நடந்தது.
இதனால் தற்காலிகமாக தென்றல் நகர் மெயின் ரோட்டில் வாரச்சந்தை அமைத்து கொள்ள நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியது. இங்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்கின்றனர். வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அங்கு வியாபாரிகள் செல்ல மறுத்தனர்.
ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்து காய்கறி கடைகளை அமைத்ததால் போக்குவரத்திற்கு இடையூறும், குடியிருப்பவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் அளித்தனர்.
பின் நகராட்சி வலியுறுத்தியும் வியாபாரிகள் ஏற்கனவே செயல்பட்ட இடத்திற்கு செல்ல மறுத்துவிட்டனர். இதனால் கடந்த வாரம் போலீஸ் பாதுகாப்புடன் காய்கறி கடைகள் வாரச்சந்தையில் மாற்றி அமைக்கப்பட்டன. நேற்று வாரச் சந்தையில் கடைகள் அமைக்காமல் மீண்டும் ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் அமைத்தனர். நகராட்சி நிர்வாகம் தடுத்தது. வாரச் சந்தையில் கட்டி உள்ள வணிக வளாக கடைகள் சிறிதாக உள்ளன. வியாபாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் இல்லை. அதனால் இங்குதான் கடைகள் அமைப்போம் என நகராட்சியை கண்டித்து வியாபாரிகள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். போடி டவுன் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வியாபாரிகளிடம் பேச்ச வார்த்தை நடத்தினார். நகராட்சி கமிஷனரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறியதால் கலைந்து சென்று, மீண்டும் அதே இடத்தில் கடைகள் அமைத்தனர்.