/உள்ளூர் செய்திகள்/தேனி/ பாறை மீது ஏறிய காட்டு யானை பட்டாசு வெடித்து விரட்டல் பாறை மீது ஏறிய காட்டு யானை பட்டாசு வெடித்து விரட்டல்
பாறை மீது ஏறிய காட்டு யானை பட்டாசு வெடித்து விரட்டல்
பாறை மீது ஏறிய காட்டு யானை பட்டாசு வெடித்து விரட்டல்
பாறை மீது ஏறிய காட்டு யானை பட்டாசு வெடித்து விரட்டல்
ADDED : செப் 19, 2025 02:25 AM

மூணாறு: பெரியகானல் எஸ்டேட், லோயர் டிவிஷனில் பாறை மீது ஏறிய காட்டு யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து பாதுகாப்பாக கீழே விரட்டினர்.
மூணாறு அருகே டாடா கம்பெனிக்கு சொந்தமான பெரியகானல் எஸ்டேட், லோயர் டிவிஷனில் தேயிலை தோட்டத்தினுள் நான்கு காட்டு யானைகள் கொண்ட கூட்டம் நேற்று முகாமிட்டு இருந்தன. அவற்றை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒரு யானை பாறை மீது ஏறியது. அதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் பாதுகாப்பு கருதி பட்டாசு வெடித்து யானையை பாறையில் இருந்து கீழே இறக்கினர். யானை பத்திரமாக கீழே இறங்கியதால் நிம்மதி அடைந்த வனத்துறையினர் அவற்றை தீவிரமாக கண்காணித்தனர்.