மினி வேன் டூவீலரில் மோதி இளைஞர் பலி
மினி வேன் டூவீலரில் மோதி இளைஞர் பலி
மினி வேன் டூவீலரில் மோதி இளைஞர் பலி
ADDED : ஜன 28, 2024 06:57 AM
தேவதானப்பட்டி, : திண்டுக்கல் மாவட்டம், பழைய சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் கேசவன் 20. இவரது நண்பர் ஜெயராம் 19. இருவரும் பெரியகுளம் சென்று விட்டு சிலுக்குவார்பட்டிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். டூவீலரை தமிழரசன் ஓட்டினார்.
கேசவன் பின்னால் உட்கார்ந்திருந்தார்.
தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி பிரிவில் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத மினி வேன் சிக்னல் காட்டாமல் திரும்பியது. இதனால் வாகனம் டூவீலரில் மோதியது.
இதில் நிலை தடுமாறி எதிர்திசையில், கர்நாடகாவில் இருந்து குமுளி நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதில் இரு டூவீலர்களிலும் பயணம் செய்த தமிழரசன், கேசவன், கர்நாடாகவைச் சேர்ந்த பிரதீஷ், செல்வி ஆகிய நான்கு பேரும் காயமடைந்தனர். இவர்கள் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் கேசவன் சிகிச்சை பலனின்றி இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய சரக்கு மினி வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.