ADDED : ஜூலை 24, 2024 10:57 PM

திருநெல்வேலி:சென்னையை சேர்ந்த ரவுடி வைரமணி திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த மாரியப்பன் மகன் வைரமணி 25. பல ஆண்டுகளாக சென்னையில் ரவுடி கும்பல்களுடன் செயல்பட்டு வந்தார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப்பின் தமிழகம் முழுவதும் ரவுடிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை ரவுடியான வைரமணி திருநெல்வேலி வீரவநல்லூரில் தங்கி இருந்தபோது அவரை போலீசார் கைது செய்தனர். கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவர் கைது செய்துள்ளனர்.