/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ நான்குநேரி அரசு பள்ளி மாணவர்கள் திடீர் மோதல் நான்குநேரி அரசு பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்
நான்குநேரி அரசு பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்
நான்குநேரி அரசு பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்
நான்குநேரி அரசு பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்
ADDED : ஜூலை 25, 2024 09:50 PM
நான்குநேரி:திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி தாலுகா அலுவலகம் அருகே சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மாணவ - மாணவியர் என இருபாலரும் படிக்கின்றனர். நேற்று அங்கு 10ம் வகுப்பு படித்து வரும் இரு வெவ்வேறு பிரிவை சேர்ந்த மாணவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் ஒருவரையொருவர் கையால் தாக்கினர். இதில், மாணவனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.
அந்த மாணவனை சிகிச்சைக்காக நான்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, மாணவன் அளித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் 2 மாணவர்களின் பெற்றோர்களையும் வரச்செய்து கையால் தாக்கிய மாணவனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.