/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ மகிழ்வண்ணநாதபுரம் பெருமாள் கோயிலில் கருட சேவை ரத்து பக்தர்கள் போராட்டம் மகிழ்வண்ணநாதபுரம் பெருமாள் கோயிலில் கருட சேவை ரத்து பக்தர்கள் போராட்டம்
மகிழ்வண்ணநாதபுரம் பெருமாள் கோயிலில் கருட சேவை ரத்து பக்தர்கள் போராட்டம்
மகிழ்வண்ணநாதபுரம் பெருமாள் கோயிலில் கருட சேவை ரத்து பக்தர்கள் போராட்டம்
மகிழ்வண்ணநாதபுரம் பெருமாள் கோயிலில் கருட சேவை ரத்து பக்தர்கள் போராட்டம்
ADDED : செப் 20, 2025 10:50 PM

திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன் மகிழ்வண்ணநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் நடைபெறும் கருட சேவை உற்சவத்தை ஹிந்து அறநிலையத்துறை திடீரென ரத்து செய்ததால் பக்தர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தாண்டு உபயதாரர் இல்லை. கருட வாகனம் இல்லை என கூறி கருட சேவை ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர்கள் கோயில் முன் கூடினர். கருட சேவை புரட்டாசி சனிக் கிழமையன்று நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் கண்களில் கருப்பு துணி கட்டி, ராம நாமம் ஜெபித்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஹிந்து அறநிலையத்துறை சார்பில் கோயில் செயல் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி, வரவிருக்கும் வாரங்களில் கருட சேவை உற்ஸவம் ஆண்டுதோறும் நடத்தப்படும் என உறுதியளித்தார். அதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.