/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ நடுக்கடலில் 36 மணிநேரம் தத்தளித்த மீனவர் மீட்பு நடுக்கடலில் 36 மணிநேரம் தத்தளித்த மீனவர் மீட்பு
நடுக்கடலில் 36 மணிநேரம் தத்தளித்த மீனவர் மீட்பு
நடுக்கடலில் 36 மணிநேரம் தத்தளித்த மீனவர் மீட்பு
நடுக்கடலில் 36 மணிநேரம் தத்தளித்த மீனவர் மீட்பு
ADDED : செப் 23, 2025 06:32 AM
திருநெல்வேலி; கடலில் மீன் பிடிக்க சென்று இரண்டு நாட்களுக்கு முன் மாயமான மீனவர், 36 மணிநேரம் தத்தளித்த நிலையில், உயிருடன் மீட்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே செட்டிகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சிவமுருகன், 35. கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் கடலில் மீன் பிடிக்க சென்றபோது, இரண்டு நாட்களுக்கு முன் படகில் இருந்து தவறி விழுந்து மாயமானார்.
நேற்று முன்தினம் இரவு, கூத்தங்குழி மீனவர் அருளப்பன் தலைமையில் படகில் சென்றவர்கள், நடுக்கடலில் மிதவை கட்டையை பிடித்தபடி சிவமுருகன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து மீட்டனர்.
மாயமாகி, 36 மணிநேரம் அவர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை காணாமல் பரிதவித்துக் கொண்டிருந்த குடும்பத்தினர் சிவமுருகன் உயிருடன் மீட்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். அருளப்பன் குழுவினரை பொதுமக்கள் பாராட்டினர்.