Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன் 10 பேர் தீக்குளிக்க முயற்சி :55 பெண்கள் உட்பட 108 பேர் கைது

தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன் 10 பேர் தீக்குளிக்க முயற்சி :55 பெண்கள் உட்பட 108 பேர் கைது

தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன் 10 பேர் தீக்குளிக்க முயற்சி :55 பெண்கள் உட்பட 108 பேர் கைது

தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன் 10 பேர் தீக்குளிக்க முயற்சி :55 பெண்கள் உட்பட 108 பேர் கைது

ADDED : அக் 07, 2025 08:23 PM


Google News
தென்காசி :தென்காசி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்த போராட்டத்தின் போது 10 பேர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கள்ளத்திகுளத்தில் தனியார் நிறுவனம் சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதற்காக ஏராளமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு விட்டன. இதனால் மான்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் இறந்துவிட்டன. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், நேற்று கள்ளத்திகுளம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டக்காரர்களில் சிலர் கலெக்டரைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, கலெக்டர் கமல் கிஷோர், வனத்துறை மூலம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக தெரிவித்தார்.ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பே தொடர்ந்து அமர்ந்து கோஷமிட்டனர். அப்போது டி.எஸ்.பி., தமிழ் இனியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையில் போராட்டக்காரர்களில் 10 பேர் தாங்கள் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். மேலும் சிலர் அங்கு இருந்த பொதுமக்கள்மீதும் மண்ணெண்ணெயை தெளித்தனர்.உடனடியாக போலீசார் தீக்குளிக்க முயன்றவர்களின் தலையில் தண்ணீர் ஊற்றி தடுத்து மீட்டனர். நிலைமை மோசமடையாமல் இருக்க அலுவலக வாசல் கதவை போலீசார் மூடியதுடன், தீயணைப்பு வீரர்கள் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.பின்னர் 55 பெண்கள் உட்பட 108 பேரை போலீசார் கைது செய்து பஸ்களில் அழைத்துச் சென்றனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us