/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ பாதயாத்திரை சென்றவர் கொலை மூவருக்கு ஆயுள் தண்டனை திருநெல்வேலி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு பாதயாத்திரை சென்றவர் கொலை மூவருக்கு ஆயுள் தண்டனை திருநெல்வேலி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
பாதயாத்திரை சென்றவர் கொலை மூவருக்கு ஆயுள் தண்டனை திருநெல்வேலி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
பாதயாத்திரை சென்றவர் கொலை மூவருக்கு ஆயுள் தண்டனை திருநெல்வேலி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
பாதயாத்திரை சென்றவர் கொலை மூவருக்கு ஆயுள் தண்டனை திருநெல்வேலி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
ADDED : செப் 17, 2025 03:58 AM

திருநெல்வேலி:அடுத்தடுத்து நடந்த கொலைகளுக்கு பழிக்கு பழியாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வாகைகுளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்தது.
1999ல் கிருஷ்ணனின் அண்ணன் மூக்கன் கொலை செய்யப்பட்டார். இதற்கு செல்வராஜ் தந்தை வேம்பு உதவியாக இருந்தார்.
இதனால் இரு குடும்பங்களுக்கும் விரோதம் அதிகரித்தது. இதற்கு பழிக்குப் பழியாக 2000 ல் கிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் வேம்புவை வெட்டி கொலை செய்தனர்.
2013 ஜன., 24 செல்வராஜ் நண்பர்களுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார்.
வழியில் முன்னீர்பள்ளம் அருகே பிரான்சேரியில் மறுநாள் கோயிலில் அவர்கள் ஓய்வெடுத்தனர். அதிகாலையில் ஒரு கும்பல் செல்வராஜை வெட்டி கொலை செய்தது.
இவ்வழக்கில் கிருஷ்ணன், சவரிமுத்து, விஜய், பாக்யராஜ் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் கிருஷ்ணன் இறந்து விட்டார்.
சவரிமுத்து, பாக்யராஜ், விஜய்க்கு தலா ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப் பளித்தார்.