/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வங்கனுாரில் பராமரிப்பு இன்றி பாழாகும் பெரிய குளம் வங்கனுாரில் பராமரிப்பு இன்றி பாழாகும் பெரிய குளம்
வங்கனுாரில் பராமரிப்பு இன்றி பாழாகும் பெரிய குளம்
வங்கனுாரில் பராமரிப்பு இன்றி பாழாகும் பெரிய குளம்
வங்கனுாரில் பராமரிப்பு இன்றி பாழாகும் பெரிய குளம்
ADDED : ஜூலை 20, 2024 06:13 AM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வங்கனுாரில், சின்ன குளம் மற்றும் பெரிய குளம் என இரண்டு பொது குளங்கள் அமைந்துள்ளன.
ஆத்மலிங்கேஸ்வரர் கோவில் எதிரே சின்னகுளமும், கிராமத்தின் வடகிழக்கில் பெரிய குளமும் உள்ளன. இந்த குளங்கள் கடந்த நுாற்றாண்டில், கிராமத்தின் பிரதான குடிநீர் ஆதாரங்களாக செயல்பட்டு வந்தன.
அதன்பின் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் துவங்கியதும், குளங்களின் பராமரிப்பு கேள்விக்குறியாக மாறியது.
சின்ன குளம் பன்றிகள் உழலும் குட்டையாகவும், பெரிய குளம் சலவைத்துறையாகவும் மாறின. இதில், தனியார் தொண்டு நிறுவனத்தின் வாயிலாக சின்ன குளம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துார்வாரி சீரமைக்கப்பட்டது.
ஆனால், பெரிய குளம் தொடர்ந்து கவனிக்கப்படாமல் கிடக்கிறது. இதனால், குளத்தின் படித்துறைகள் புதர் மண்டியுள்ளன.
குளத்தில் யாரும் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளக்கரையில் உள்ள நாகாலம்மன் கோவில் வளாகமும் சீரழிந்து வருகிறது.
இதுவரை வற்றாத நீரோட்டம் கொண்ட இந்த குளத்தின் நீர்வளத்தை பயன்படுத்தி, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், இந்த குளக்கரையில், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நுாறு நாள் வேலை பணியாளர்களை கொண்டு இந்த குளக்கரையை சீரமைக்கவும், மீண்டும் மரக்கன்றுகள் வளர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.