/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நத்தம் பாலமுருகன் கோவிலில் ஆடிப்பரணி விழா கோலாகலம் நத்தம் பாலமுருகன் கோவிலில் ஆடிப்பரணி விழா கோலாகலம்
நத்தம் பாலமுருகன் கோவிலில் ஆடிப்பரணி விழா கோலாகலம்
நத்தம் பாலமுருகன் கோவிலில் ஆடிப்பரணி விழா கோலாகலம்
நத்தம் பாலமுருகன் கோவிலில் ஆடிப்பரணி விழா கோலாகலம்
ADDED : ஜூலை 28, 2024 11:06 PM

திருத்தணி: திருத்தணி அடுத்த அகூர் நத்தம் கிராமத்தில், கடந்தாண்டு ஆடிக்கிருத்திகை தினத்தன்று, பழுதடைந்த மண்டபத்தில் மயில் அமர்ந்துள்ள பாலமுருகர் கற்சிலை கிடைத்தது.
பின், தமிழ்நாடு யாதவ மகா சபை மாநில துணைதலைவர் ஏ.கே.சுப்பிரமணி தலைமையில் கிராம பொதுமக்கள், பாலமுருகர் சிலை பிரதிஷ்டை செய்து, தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை ஆடிப்பரணியை ஒட்டி மூலவர் பாலமுருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் காவடிகளுடன் வந்து பாலமுருக பெருமானை வழிபட்டனர்.
காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை தமிழ்நாடு யாதவ மகா சபை மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து அன்னதானம் வழங்கினர். அன்னதானத்தை மாநில துணை தலைவர் ஏ.கே.சுப்பிரமணி துவக்கி வைத்தார்.
அதே போல் மேல்திருத்தணியில், அகில இந்தியா மனிதநேய மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில், 17வது ஆண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கவுர தலைவர் ஏ.கே.சுப்ரமணியம் துவக்கி வைத்தார்.
இதில் தலைவர் கஜேந்திரன், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். காலை 10:00 - முதல் மாலை 5:00 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது.