Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பீச் - அரக்கோணம் தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்

பீச் - அரக்கோணம் தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்

பீச் - அரக்கோணம் தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்

பீச் - அரக்கோணம் தடத்தில் ரயில் சேவையில் மாற்றம்

ADDED : ஜூலை 28, 2024 02:26 AM


Google News
சென்னை:'சென்னை கடற்கரை -- விழுப்புரம் மார்க்கத்தில், கடற்கரை பணிமனையில் ரயில் பாதை மேம்பாட்டு பணி நடப்பதால், இன்று புறநகர் மின்சார ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன' என, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

l சென்னை கடற்கரை -- ஆவடி இன்று காலை 10:25, 10:35, 11:05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், மதியம் ஆவடி - சென்னை கடற்கரைக்கு 2:45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

பாதி வழியில் ரத்து


l திருத்தணி -- சென்னை கடற்கரை இன்று காலை 8:50 மணி ரயில், வியாசர்பாடி ஜீவா- - சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

l திருவள்ளூர் -- சென்னை கடற்கரை இன்று காலை 11:00 மணி ரயில், வியாசர்பாடி ஜீவா -- சென்னை கடற்கரை இடையே, பகுதி ரத்து செய்யப்படுகிறது

l கடம்பத்துார் -சென்னை கடற்கரை மதியம் 12:05 மணிக்கு புறப்படும் ரயில், வியாசர்பாடி ஜீவா -- சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது

l சென்னை கடற்கரை -- திருத்தணி மதியம் 12:10 மணி ரயில், சென்னை கடற்கரை - -வியாசர்பாடி ஜீவா இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரல் நிலையத்தில் இருந்து 12:15 மணிக்கு புறப்படும்

l சென்னை கடற்கரை -- திருவள்ளூர் மதியம் 1:05 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், சென்னை கடற்கரை -- வியாசர்பாடி ஜீவா இடையே, பகுதி ரத்து செய்யப்படுகிறது. மதியம் 1:10 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும்

l சென்னை கடற்கரை -- பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மதியம் 1:50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், சென்னை கடற்கரை -- வியாசர்பாடி ஜீவா இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல் நிலையத்தில் இருந்து மதியம் 1:55 மணிக்கு புறப்படும்

l சென்னை கடற்கரை -- அரக்கோணம் மதியம் 2:25 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை கடற்கரை -- ஆவடி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது ஆவடியில்இருந்து 3:10 மணிக்கு புறப்பட்டு செல்லும் மூன்று ரயில்களின் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டேஷன் மாஸ்டரிடம் வாக்குவாதம்


அரக்கோணத்தில் இருந்து சென்னை, ஆவடி, அம்பத்துார், பத்திரபாக்கம் பகுதிகளில் பணிபுரியும் பயணியர், 10,000த்திற்கும் மேற்பட்டோர், தினமும் காலை அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு, மீண்டும் மாலை நேரங்களில் மின்சார ரயில்கள் வாயிலாக வீடு திரும்புகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து இரவு 7:00க்கு புறப்பட்ட ரயில், 8:40க்கு புளியமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து சிக்னல் தரப்பட்டு, 9:40க்கு அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. இந்த கால தாமதம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

புளியமங்கலத்தில் இருந்து அரக்கோணம் வருவதற்கு, மூன்று நிமிடம் மட்டுமேயாகும். ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பயணியர் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பயணியர் கூறுகையில், 'சிக்னல் இயக்கும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் போதுமான பயிற்சி இல்லை. உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இனிவரும் காலங்களில் சரியான முறையில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us