/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் சப் - ஜூனியரில் செங்கை 2ம் இடம் தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் சப் - ஜூனியரில் செங்கை 2ம் இடம்
தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் சப் - ஜூனியரில் செங்கை 2ம் இடம்
தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் சப் - ஜூனியரில் செங்கை 2ம் இடம்
தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் சப் - ஜூனியரில் செங்கை 2ம் இடம்
ADDED : ஜூலை 30, 2024 06:48 AM

சென்னை: ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் சங்கம் மற்றும் திருச்சி ரோல்பால் சங்கம் சார்பில், 11வது தேசிய சப் - ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி, திருச்சியில், 26ம் தேதி துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது. எஸ்.டி.ஏ.டி., - 'பிட்' இந்தியா உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சென்னை, செங்கல்பட்டு உட்பட ஆண்களில் 30 மாவட்ட அணிகளும், பெண்களில் 10 மாவட்ட அணிகளும் பங்கேற்றன.
முதல் நாள் போட்டியை, தென்னிந்திய ரோல்பால் சங்க பொதுச்செயலர் சுப்ரமணியம், ஸ்போர்ட்ஸ் ரோல்பால் சங்க தலைவர் செல்லமுத்து, செயலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர்.
இந்திய ரோல்பால் சங்கத்தின் நிர்வாகி நிலேஷ் பாபா ஷிண்டே உடனிருந்தார்.
அனைத்து போட்டிகள் முடிவில், ஆண்களில் கோவை முதலிடத்தையும், செங்கல்பட்டு இரண்டாம் இடத்தையும், திண்டுக்கல் மற்றும் கடலுார் அணிகள் மூன்றாம் இடத்தையும் பகிர்ந்து கொண்டன.
பெண்களிலும் கோவை அணி முதலிடத்தை கைப்பற்றியது. இரண்டாம் இடத்தை திண்டுக்கல், மூன்றாம் இடத்தை திருச்சி மற்றும் கரூர் கைப்பற்றின.