ADDED : ஜூலை 20, 2024 06:19 AM
அரக்கோணம்: அரக்கோணம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ரயில்வே யார்டுக்கு செல்லும் வழியில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இறந்து நிலையில் கிடப்பதாக டவுன்போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு, விசாரித்தனர்.
விசாரணையில், குழந்தையை கட்டை பையில் கொண்டு வந்து போட்டு விட்டு சென்றது ஒரு பெண் என தெரிந்தது. பஸ் ஸ்டாண்டில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.