/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி கிடப்பில் பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி கிடப்பில்
பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி கிடப்பில்
பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி கிடப்பில்
பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி கிடப்பில்
ADDED : மார் 13, 2025 02:36 AM

திருமழிசை:திருமழிசை பஸ் நிலையம் அருகே ரூ.1.24 கோடி மதிப்பில் புதிய பேரூராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணிக்கு கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
4,000 சதுர அடியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பேரூராட்சி மன்ற அலுவலகம் கட்டட பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்த நிலையில் தற்போது எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரூராட்சி அலுவலக கட்டடத்தை விரைந்து முடிக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.