/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சேதமான மின்மாற்றியால் பசுவன்பாளையத்தில் அபாயம் சேதமான மின்மாற்றியால் பசுவன்பாளையத்தில் அபாயம்
சேதமான மின்மாற்றியால் பசுவன்பாளையத்தில் அபாயம்
சேதமான மின்மாற்றியால் பசுவன்பாளையத்தில் அபாயம்
சேதமான மின்மாற்றியால் பசுவன்பாளையத்தில் அபாயம்
ADDED : ஜூன் 30, 2024 12:34 AM

சோழவரம்:சோழவரம் அடுத்த பசுவன்பாளையம், கண்ணியம்பாளையம், நெற்குன்றம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மின்கம்பங்கள், மின்மாற்றி ஆகியவை சோத்துப்பெரும்பேடு துணை நிலையத்தால் பராமரிக்கப்படுகிறது.
இதில், பசுவன்பாளையம் கிராமத்தில், காரனோடை - சீமாவரம் சாலையோரம் உள்ள மின்மாற்றி ஒன்று பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
மின்மாற்றியை தாங்கி பிடித்துள்ள சிமென்ட் கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன. கம்பங்களின் சிமென்ட் பூச்சுகள் கொட்டி, இரும்பு கம்பிகள் தெரிகின்றன.
பலத்த காற்று வீசினால் மின்கம்பங்கள் உடைந்து, மின்மாற்றி கீழே விழும் அபாயம் உள்ளது. இதனால் மின்விபத்துக்களுக்கும் வாய்ப்பு உள்ளது.
இதனால் மின்மாற்றி உள்ள மின்கம்பங்களை மாற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.