ADDED : ஜூன் 30, 2024 11:02 PM
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த குமாரராஜபேட்டையை சேர்ந்தவர் காமராஜ், 45; விவசாயி. இவர் நேற்று காலை 8:00 மணிக்கு அவரது வீட்டில் இருந்து பஜாஜ் டிஸ்கவர் வாகனத்தில், வயல்வெளிக்கு புறப்பட்டு சென்றார்.
பள்ளிப்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே, யமஹா வாகனத்தில் வந்த நபர், இவரது வாகனத்தின் மீது மோதினார். இதில், பலத்த காயம் அடைந்த காமராஜ், பள்ளிப்பட்டு அடுத்த கோனேடம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காமராஜ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.