Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மீன்பிடி வலைகள் எரிந்த சம்பவம்: அதிகாரிகள் ஆய்வு

மீன்பிடி வலைகள் எரிந்த சம்பவம்: அதிகாரிகள் ஆய்வு

மீன்பிடி வலைகள் எரிந்த சம்பவம்: அதிகாரிகள் ஆய்வு

மீன்பிடி வலைகள் எரிந்த சம்பவம்: அதிகாரிகள் ஆய்வு

ADDED : ஜூலை 28, 2024 02:46 AM


Google News
Latest Tamil News
பழவேற்காடு:பழவேற்காடு மீனவப்பகுதியில் உள்ள அரங்கம் குப்பத்தில், கடந்த, 24ம் தேதி, ஏரிக்கரையில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைகளை, மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர்.

கடந்த ஒரு மாதம் முன், பசியாவாரம், சாட்டன்குப்பம் கிராமங்களிலும், இதே போன்று மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்டன. பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் அவ்வப்போது மர்ம நபர்களால் எரிக்கப்படுவதால், பழவேற்காடில் பரபரப்பு நிலவுகிறது.

இது தொடர்பாக, திருப்பாலைவனம் போலீசார் மற்றும் மீன்வளத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மீன்வளத்துறை சென்னை மண்டல இணை இயக்குனர் சந்திரா, பழவேற்காடு மீனவப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது மீனவர்கள் மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்டதால், தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்ட உதவி இயக்குனர் அஜய் ஆனந்த மற்றும் அதிகாரிகள் உடனடிருந்தனர்.

மீன்பிடி வலைகளை இழந்த மீனவர்களிடம் இணை இயக்குனர் ஆறுதல் கூறினார். இழப்பீடு பெற்று தருவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிதார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us