/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பலி குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பலி
குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பலி
குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பலி
குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பலி
ADDED : ஜூலை 02, 2024 06:58 AM
சோழவரம்: சோழவரம் அடுத்த அருமந்தை கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள், 70. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள, நல்லதண்ணீர் குளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென தடுமாறி, குளத்தில் விழுந்து, நீரில் மூழ்கி மாயமானார். இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கன்னியம்மாளை தேடினர். சிறிது நேர தேடலுக்கு பின், அவரை சடலமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
போலீசார் கன்னியம்மாளின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.