/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் படம் மட்டும் பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் படம் மட்டும்
பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் படம் மட்டும்
பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் படம் மட்டும்
பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் படம் மட்டும்
ADDED : ஜூன் 11, 2024 05:00 AM

ஊத்துக்கோட்டை: கோடை விடுமுறை முடிந்து நேற்று காலை தமிழகம் முழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படடன.
ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் காலை மாணவியர் வகுப்பறைக்கு சென்ற பின் பெற்றோர், ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் சையத்பாத்திமா தலைமை வகித்து பேசியதாவது:
பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர், அவர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு உண்டு. தினமும் என்ன பாடங்கள் நடத்தப்பட்டது என கேட்டறிய வேண்டும். அவர்களை வீட்டில் படிக்க வைக்க வேண்டும். மாலை நேரங்களில் சிறப்பு வகுப்பு ஏற்பாடு செய்தால், ஒரு வாரத்திற்கு முன்பே பள்ளி நிர்வாகம் சார்பில் தெரியபடுத்தப்படும்.
மாணவியர் காலையில் குறித்த நேரத்திற்கு வர வேண்டும். பள்ளியில் இருந்து பெற்றோர் தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என பெற்றோர் வந்தால் மட்டுமே அனுப்பி வைக்கப்படுவர். பிள்ளைகளிடம் மொபைல் போன் கொடுக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது பெற்றோர் சிலர் பள்ளியில் கழிப்பறை, குடிநீர் வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். முன்னதாக, உதவி தலைமையாசிரியர் சில்வியாகேத்ரீன் வரவேற்றார்.