/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பார்க்கும் இடமெல்லாம் போஸ்டர் அலங்கோலமானது பூவை நகராட்சி பார்க்கும் இடமெல்லாம் போஸ்டர் அலங்கோலமானது பூவை நகராட்சி
பார்க்கும் இடமெல்லாம் போஸ்டர் அலங்கோலமானது பூவை நகராட்சி
பார்க்கும் இடமெல்லாம் போஸ்டர் அலங்கோலமானது பூவை நகராட்சி
பார்க்கும் இடமெல்லாம் போஸ்டர் அலங்கோலமானது பூவை நகராட்சி
ADDED : ஜூலை 29, 2024 02:26 AM

பூந்தமல்லி:பூந்தமல்லியில், அரசு கட்டடம் மற்றும் மெட்ரோ ரயில் கட்டுமான இடங்களில் 'போஸ்டர்'கள் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னை வருவோருக்கு, நுழைவு பகுதியாக பூந்தமல்லி நகராட்சி உள்ளது.
இந்நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலையம், நீதிமன்றம், அரசு, தனியார் பள்ளிகள், ஆன்மிக தலங்கள் ஆகியவற்றின் சுவரில், அதிக அளவில் தனியாரால் 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டு உள்ளன. குறிப்பாக அரசு கட்டடங்கள், நெடுஞ்சாலையில் உள்ள கட்டடங்கள் ஆகியவற்றில் அதிக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதேபோல, பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க வைக்கப்பட்டுள்ள துாண்கள், இரும்பாலான தடுப்புகள் ஆகியவற்றிலும் போஸ்டர் ஒட்டி, அலங்கோலமாக மாற்றியுள்ளனர்.
இவற்றை, கட்டுமான பணியில் ஈடுபடும் மெட்ரோ ஊழியர்களே, அடிக்கடி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'பழமையான பூந்தமல்லி நகரத்தை சுத்தமாக வைத்திருக்க, பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மெட்ரோ கட்டுமான இடங்கள், அரசு கட்டடம் மீது போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது, நகராட்சி மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் கடும் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும்' என்றனர்.