/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அறிவிப்பில்லாத மின் தடையால் கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி அறிவிப்பில்லாத மின் தடையால் கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி
அறிவிப்பில்லாத மின் தடையால் கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி
அறிவிப்பில்லாத மின் தடையால் கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி
அறிவிப்பில்லாத மின் தடையால் கடம்பத்துார் பகுதிவாசிகள் அவதி
ADDED : ஜூலை 02, 2024 08:36 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கடம்பத்துார், பிரையாங்குப்பம், காரணி, வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் உட்பட பல பகுதிகளில் அறிவிப்பில்லாமல், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
மின் தடை எப்போது நடைபெறும் என்று தெரியாமல், பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றி வினியோகம் செய்வதும் பாதிக்கப்படுகிறது.
நேற்று கடம்பத்துாரில் மின் தடை ஏற்பட்டதால், பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டனர். அறிவிப்பில்லாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை தடுக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.