/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாநில ஜூனியர் ஓபன் தடகளம் எஸ்.டி.ஏ.டி., 'ஓவரால் சாம்பியன்' மாநில ஜூனியர் ஓபன் தடகளம் எஸ்.டி.ஏ.டி., 'ஓவரால் சாம்பியன்'
மாநில ஜூனியர் ஓபன் தடகளம் எஸ்.டி.ஏ.டி., 'ஓவரால் சாம்பியன்'
மாநில ஜூனியர் ஓபன் தடகளம் எஸ்.டி.ஏ.டி., 'ஓவரால் சாம்பியன்'
மாநில ஜூனியர் ஓபன் தடகளம் எஸ்.டி.ஏ.டி., 'ஓவரால் சாம்பியன்'
ADDED : ஜூலை 09, 2024 06:27 AM
சென்னை: தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 36வது மாநில ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட மாநிலம் ழுழுதும் இருந்து, 3,200 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த போட்டியில், பல்வேறு வயதினருக்கு ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு மற்றும் ஈட்டி எறிதல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட வகையான போட்டிகள் நடந்தன.
அனைத்து போட்டிகள் முடிவில், ஆண்களில் ஒட்டுமொத்தமாக, 203 புள்ளிகள் பெற்று, எஸ்.டி.ஏ.டி., அணி முதலிடத்தையும், ஆரோன் தடகள அகாடமி 106 புள்ளிகளில் இரண்டாம் இடத்தையும் வென்றன.
பெண்களில், 170 புள்ளிகளில் எஸ்.டி.ஏ.டி., முதலிடத்தையும், 129 புள்ளிகளில் பாடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. தவிர ஒட்டுமொத்தமாக, எஸ்.டி.ஏ.டி., அணி, 373 புள்ளிகள் பெற்று, 'ஓவரால் சாம்பியன்' பட்டத்தை வென்றது.
ஒட்டுமொத்த 'ரன்னர் அப்' பட்டத்தை, 226 புள்ளிகளில், பாடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி தட்டிச் சென்றது. இரண்டாவது 'ரன்னர் அப்' பட்டத்தை, ஆரோன் தடகள அகாடமி அணி வென்றது.