/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ விழிப்புணர்வு பேரணி காத்திருந்த மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி காத்திருந்த மாணவர்கள்
விழிப்புணர்வு பேரணி காத்திருந்த மாணவர்கள்
விழிப்புணர்வு பேரணி காத்திருந்த மாணவர்கள்
விழிப்புணர்வு பேரணி காத்திருந்த மாணவர்கள்
ADDED : ஜூன் 30, 2024 12:39 AM

ஊத்துக்கோட்டை:தமிழகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி எங்கு நடந்தாலும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மூலம் நடத்துவது வழக்கமாக உள்ளது. இதில் முக்கிய பிரமுகர்கள் வரும் வரை மாணவர்களை காக்க வைக்கும் நிகழ்வும் அரங்கேறி வருகிறது.
போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி, திருத்தணி, ஜி.ஆர்.டி. மருந்தியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி ஊத்துக்கோட்டையில் நேற்று காலை நடந்தது.
ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., பேரணி துவக்கி வைத்தார். இதற்காக மாணவர்கள் மின்வாரிய அலுவலகம் அருகே காலை, 10:00 மணி முதல் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.
காலை, 10:45 மணி வரை ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., கணேஷ்குமார் வரவில்லை. இதனால் மாணவர்கள் வெயிலின் தாக்கத்தால், அருகில் கடை நிழலில் தஞ்சமடைந்தனர்.
சில மாணவியர் தாகத்தால், கடைகளுக்குச் சென்று குளிர்பானம் வாங்கி பருகினர். டி.எஸ்.பி., வர இயலாததால், ஆய்வாளர் ஏழுமலை நிகழ்ச்சியை துவக்கி வைப்பார் என்ற தகவல் கிடைத்தது.
காலை, 11:00 மணிக்கு போலீஸ் ஆய்வாளர் ஏழுமலை வந்து பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியே சென்ற பேரணியில், போதை பொருட்களை ஒழிப்போம், உயிரை குடிக்கும் மது வேண்டாம், புகைப் பொருட்களை தவிர்ப்போம்' உள்ளிட்ட வாசங்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி, கல்லுாரி மாணவர்கள் பேரணி நிகழ்ச்சிக்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.