/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சிறு மழைக்கே குளமான சாலை ஊத்துக்கோட்டையில் அவலம் சிறு மழைக்கே குளமான சாலை ஊத்துக்கோட்டையில் அவலம்
சிறு மழைக்கே குளமான சாலை ஊத்துக்கோட்டையில் அவலம்
சிறு மழைக்கே குளமான சாலை ஊத்துக்கோட்டையில் அவலம்
சிறு மழைக்கே குளமான சாலை ஊத்துக்கோட்டையில் அவலம்
ADDED : ஜூன் 17, 2024 03:47 AM

ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை பேரூராட்சி, அரசு மருத்துவமனை பின்புறம் சாலையில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகளான சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் ஏதுமில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வசதி இல்லை.
மேலும், மேடு, பள்ளமாக சாலை இருப்பதால், தண்ணீர் தேங்கி விடுகிறது. இரு நாட்களாக ஊத்துக்கோட்டை பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதில் கொசுக்கள் உருவாகி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அரசு மருத்துவமனை பின்புறம் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.