ADDED : ஆக 01, 2024 11:39 PM
கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம், புத்துார் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 26. கூலி தொழிலாளி. கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்தபடி கூலி வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு சர்வேஸ்வரன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. கடந்த மாதம், 28ம் தேதி, விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, சூடான சாம்பார் பாத்திரம் கவிழ்ந்து, பலத்த காயம் அடைந்தான். ஆபத்தான நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை, நேற்று முன்தினம் உயிரிழந்தான். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.