/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 30, 2024 06:52 AM

பொன்னேரி: பொன்னேரி அடுத்த சின்னகாவணம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 25; முதுகலை பட்டதாரியான இவர், தன் சித்தப்பாவின் 'சவுண்ட் சர்வீஸ்' கடையில் அவருக்கு உதவியாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம், பொன்னேரி அடுத்த மூலத்தாங்கல் கிராமத்தில் உள்ள துலுக்காணத்தம்மன் கோவிலில், ஆடிமாத தீமிதி திருவிழா நடந்தது. இதற்கு அலங்கார விளக்குகள், ஒலிப்பான்கள் மற்றும் வண்ண கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டன.
திருவிழா முடிந்த நிலையில், நேற்று காலை கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் மோகன் ஈடுபட்டிருந்தார். மண்ணில் பதித்து வைத்திருந்த இரும்பு கொடி கம்பத்தை மேல்நோக்கி துாக்கும்போது, மேலே இருந்த உயரழுத்த மின் ஒயரில் உரசியது.
அதன் வழியாக, மின்சாரம் பாய்ந்து மோகன் துாக்கி வீசப்பட்டார்.
உடனடியாக அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.