/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கடத்திவரப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்கடத்திவரப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்
கடத்திவரப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்
கடத்திவரப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்
கடத்திவரப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : பிப் 01, 2024 09:58 PM

தாம்பரம்:கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த கொர்ரா பீமேஷ்வர் ராவ், 35, பெத்துராஜீ ரமணா, 43, ஆகிய இருவரை மதுவிலக்கு பிரிவு போலீசார் விசாரித்தனர்.
அவர்களுடைய உடைமைகளை சோதனை செய்ததில், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு பிரிவு போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.


